/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல்
/
மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல்
ADDED : டிச 21, 2025 06:00 AM

நெய்வேலி டிச. 21-: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
கடலுார் டி.இ.ஓ., துரைபாண்டியன் தலைமை தாங்கினார். விழாவில் மருங்கூர், பேர்பெரியாங்குப்பம், காடாம்புலியூர் பத்திரக்கோட்டை, காடாம்புலியூர், பெரியகாட்டுபாளையம், உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் 855 மாணவ, மாணவிகளுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சைக்கிள்கள் வழங்கி பேசினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ராமலிங்கம், முருகையன், மீனாம்பிகை, பன்னீர்செல்வம், முருகவேல், தேவேந்திரன், கிரிஜா, நெய்வேலி நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

