/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நம்பிக்கை
/
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நம்பிக்கை
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நம்பிக்கை
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நம்பிக்கை
ADDED : செப் 05, 2025 11:54 PM

விருத்தாசலம்,: கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் தங்கராசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார். மூத்த நிர்வாகி முருகுமணி, மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில பேரவை துணை செயலாளர் அருள் அழகன், நிர்வாகிகள் சக்திவேல், அருண், உமா மகேஸ்வரன், ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, பச்சமுத்து, வேல்முருகன், கருப்பன், முத்து, இளங்கோவன், சின்ன ரகுராமன், விஜயகுமார், அரங்க மணிவண்ணன், தங்கராசு, அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர். சவுந்தரராஜன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தி.மு.க., விடியா அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறார். தவறுகளை சுட்டிக்காட்ட கூட்டணி கட்சியினரும் தயாராக இல்லை.
அ.தி.மு.க., விற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, தி.மு.க., கூட்டணியை பாதுகாத்து வருகிறார் ஸ்டாலின். வீடு வீடாக சென்று அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை தெரிவிக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியின் அவலங்களை நோட்டீஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க.,வை சிதைக்க எத்தனை ஸ்டாலின் நினைத்தாலும் முடியாது. இரட்டை இலை, கொடி எங்கு இருக்குமோ அங்கு தான் இருப்போம். அமைச்சர் கணேசனின் சொந்த ஊராட்சியான அரியநாச்சியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் தி.மு.க., வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். அந்த அளவுக்கு தி.மு.க., மீது அக்கட்சியினருக்கே வெறுப்பு ஏற்பட்டு விட்டது. 2026 தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் அட்சி அமைக்கும்
இவ்வாறு, அவர் பேசினார்.