/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை வளாகத்தில் நெல் மூட்டைகள் சேதம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,ஆய்வு
/
சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை வளாகத்தில் நெல் மூட்டைகள் சேதம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,ஆய்வு
சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை வளாகத்தில் நெல் மூட்டைகள் சேதம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,ஆய்வு
சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை வளாகத்தில் நெல் மூட்டைகள் சேதம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,ஆய்வு
ADDED : அக் 31, 2025 02:23 AM

சேத்தியாத்தோப்பு:  சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அரசு கொள்முதல் செய்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததை எம்.எல்.ஏ.,பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு தாலுக்காக்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் செய்துள்ள மூட்டைகளை சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நெல்மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதுபற்றிய தகவலின் பேரில், புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் நேற்று காலை 11.00 மணியளவில் எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்திற்கு வந்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ.,கூறும் போது, 'அரசு கொள்முதல் செய்துள்ள நெல்மூட்டைகளை குடோன்களுக்கு அனுப்பாமல் சர்க்கரை ஆலை வளாகத்தில் 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் மூட்டைகளை சர்க்கரை ஆலை வளாகத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைத்துள்ளனர்.கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் பல ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டுள்ளது.
நெல் தானியங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அலட்சியப்போக்கால் நெல் நனைந்து சேதமடைந்துள்ளது, என்று கூறினார்.
ஆய்வின் போது, சர்க்கரை ஆலை முன்னாள் சேர்மன் பாலசுந்தரம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கனகசிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், சீனிவாசன் அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

