/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜூலை 06, 2025 07:12 AM

சிதம்பரம் : கடலுார் கிழக்கு மாவட்ட. அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் ஜெயங்கொண்டபட்டிணத்தில் திண்ணை பிரசாரம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், துணை செயலாளர் செல்வம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மாரிமுத்து, பாசறை வசந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, கலை பிரிவு இளஞ்செழியன், மாணவரணி அஜய் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று அ.தி.மு.க., ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்து கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகஜீவன்ராம், நிர்வாகிகள் சக்திவேல், சவுந்தர்ராஜன், மணிகண்டன், குணசேகர், மோகன், சாந்தி முருகேசன், சாமிநாதன், அமுதா ரவிச்சந்திரன், பாண்டியன், ஜெ., பேரவை செயலாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.