/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருத்துறையூர் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
திருத்துறையூர் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
திருத்துறையூர் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
திருத்துறையூர் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஜன 24, 2025 06:25 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமத்தில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அண்ணாகிராம ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் திருமலைராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சம்பத், மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், தலைமை கழக பேச்சாளர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினர்.
இதில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், டாக்டர் சீனுவாசராஜா, மீனவர் அணி தங்கமணி, ஜெ., பேரவை ஆறுமுகம், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், மாணவரணி கலையரசன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, நாகபூஷணம், நகர துணை செயலாளர் மோகன், நகர இளைஞரணி ஸ்ரீதர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.