ADDED : மார் 17, 2025 06:21 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் கடைவீதியில் கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி தெருமுனை பிரசாரம் நடந்தது.
பிரசாரத்திற்கு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலமுருகன், ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிபிரகாஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
சோழத்தரம் கடைவீதியில் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் அ.தி.மு.க.,. ஆட்சியில் மக்களுக்கான பணிகள் குறித்து விளக்கமாக கூறி துண்டு பிரசுரம் வழங்கி 2026 சட்டசபை தேர்தலில் பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக்கி நாட்டை காக்க இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு தெருமுனை பிரசாரம் செய்தனர்.
முன்னாள் சேர்மன் லதா ஜெகஜீவன்ராம், மாவட்ட பிரதிநிதிகள் தேன்மொழி ஜெயபால், மோகன், ஒன்றிய ஜெ., பேரவை நிர்வாகி சவுந்தரராஜன், ரமேஷ், ஜெயமணி, சிலம்பரசன், ஜெகதீசன், கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன், பாண்டியன், வெங்கடேஷ், பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.