ADDED : ஜூன் 21, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.
தி.மு.க., ஆட்சியின் நிர்வாக தோல்வியால் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், தொடர் மின்தடை, ஊழல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்தும் அ.தி.முக., சார்பில் கடலுார், புதுப்பாளையத்தில் திண்ணை பிரசாரம் நடந்தது. முன்னாள் அமைச்சர் சம்பத், வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், மாவட்ட அவைத் தலைவர் குமார், மணிமாறன், நகர செயலாளர் மோகன், சேகர், முன்னாள் சேர்மன் பக்கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.