/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : அக் 14, 2024 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம் : ராமநத்தம் பஸ் நிலையத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தொழுதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், திட்ட மேற்பார்வையாளர் கதிரவன், ஊராட்சி தலைவர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டக்குடி நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி, மங்களூர் நம்பிக்கை மைய ஆலோசகர்கள் தொல்காப்பியன், இந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பாதுகாப்பான உடலுறவு, ரத்தம் ஏற்றும் போது எச்சரிக்கையாக இருப்பது, பலர் பயன்படுத்திய ஊசியை தவிர்ப்பது குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.