/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளிர்சாதன வசதியுடன் ஓய்வறை விருதை ரயில்வே ஸ்டேஷனில் திறப்பு
/
குளிர்சாதன வசதியுடன் ஓய்வறை விருதை ரயில்வே ஸ்டேஷனில் திறப்பு
குளிர்சாதன வசதியுடன் ஓய்வறை விருதை ரயில்வே ஸ்டேஷனில் திறப்பு
குளிர்சாதன வசதியுடன் ஓய்வறை விருதை ரயில்வே ஸ்டேஷனில் திறப்பு
ADDED : ஆக 04, 2025 07:03 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கவுன்டர் மற்றும் நடைமேடையில் குளிர்சாதன ஓய்வறைகள் திறக்கப்பட்டன.
சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. பயணிகள் வருகை, சரக்கு, பார்சல் என கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறது.
ஆனால், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் தன்னிறைவாக கிடைக்காமல் மிகுந்த சிரமமடைந்து வந்தனர்.இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 9.5 கோடி ரூபாயில் நவீன டிக்கெட் கவுன்டர், நடைமேடை விரிவாக்கம், பயணிகள் ஓய்வறைகள் கட்டி, கடந்த இரு மாதங்களுக்கு முன் திறப்பு விழா நடந்தது.
அதைத் தொடர்ந்து, நடைமேடை 2ல் குளிர்சாதன ஓய்வறை, டிக்கெட் கவுன்டரின் மேல்தளத்தில் படுக்கை வசதியுடன் கூடிய அறைகள் நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவில், ரயில் நிலைய மேலாளர் சுனில், சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன், ஒப்பந்தாரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வறைகள் பராமரிக்கப்பட உள்ளன. இதற்காக, நடைமேடை குளிர்சாதன அறையில் ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன ஓய்வறைக்கு 3 மணி நேரத்திற்கு 600 ரூபாய், 6 மணி நேரத்திற்கு 950, 12 மணி நேரத்திற்கு 1,200, 24 மணி நேரத்திற்கு 1,700 மற்றும் சாதாரண அறைக்கு 450 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.