ADDED : செப் 05, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: அரசு விடுமுறை நாளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மிலாடிநபி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இருப்பினும் தடையை மீறி சோழதரத்தில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சோழதரம் போலீசார் ரோந்து பணி சென்ற போது, அண்ணா நகரைச் சேரந்த சந்தானம், 58; என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து சந்தானத்தை கைது செய்தனர்.