/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 01, 2024 10:44 PM

விருத்தாசலம் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களை மாற்றுதல் மற்றும் வாக்குச்சாவடி மையங்களின் வசதிகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விருத்தாசலம் உதயகுமார், வேப்பூர் மணிகண்டன், தேர்தல் துணை தாசில்தார்கள் முருகேஸ்வரி, சாருலதா, சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், தேர்தல் பிரிவு கணினி ஆப்ரேட்டர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், அ.தி.மு.க., அவை தலைவர் தங்கராசு, மார்க். கம்யூ., கட்சி வட்ட செயலாளர் அசோகன், கலைச்செல்வன், பா.ஜ., முருகவேல், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட துணை தலைவர் அருள், மக்கள் நீதி மய்யம் வெங்கடகிருஷ்ணன் ஆம் ஆத்மி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகாவில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பழுதான வாக்குச்சாவடி மைய கட்டடங்களை அகற்றிவிட்டு, மாற்று கட்டடத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை கேட்கப்பட்டது.
மொத்தம் 37 வாக்குச்சாவடி மையத்தில் பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடத்தில் வாக்கு சாவடி அமைக்கவும், தரம் உயர்தப்பட்ட 5 பள்ளிகளில் அதே கட்டடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

