/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 15, 2025 09:22 PM

கடலுார்; கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சிவப்பிரகாசம், பத்மநாபன், இணை செயலாளர் பச்சையப்பன் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், மாவட்ட செயலாளர்பழன பேசினர்.
ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா வேலிடேஷன் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
அரசுபோக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் பாஸ்கரன், ஹிந்து சமய அறநிலையத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தொழிலாளர் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் கோபால் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில செயலாளர் மனோகரன் நிறைவுரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.