/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜன 01, 2026 06:13 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட மாளிகம்பட்டு, மதனகோபாலபுரம் ஊராட்சி ஆர்.சி., நகர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க,, த.வெ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்ட்ட நிர்வாகிகள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சபா ராஜேந்திரன் பேசியதாவது:
புதிதாக இணைந்த நிர்வாகிகள் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறுவதற்கு தீவிரமாக களப்பணியாற்றிட வேண்டும். உங்கள் அனைவருக்கும் கட்சியில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட தி.மு.க., அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க, சர்வதேச நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்திட நீங்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், சாரங்கபாணி, நட்ராஜ், சுந்தரவடிவேல், ரகுபதி,பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

