/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் பைப் அமைக்கும் பணி: தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
/
குடிநீர் பைப் அமைக்கும் பணி: தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
குடிநீர் பைப் அமைக்கும் பணி: தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
குடிநீர் பைப் அமைக்கும் பணி: தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
ADDED : ஜன 01, 2026 06:13 AM

கடலுார்: கழிவுநீர் கால்வாய் மீது குடிநீர் பைப் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் வேணுகோபாலபுரத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள மேற்கு தெரு, வடக்கு தெரு சந்திப்பில் மாநகராட்சி சார்பில் குடிநீர் பைப் அமைக்க பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. நேற்று மீண்டும் பள்ளம் தோண்டப்பட்டு, பைப் அமைக்கும் பணி நடந்தது.
இதற்கிடையே நேற்றிரவு 7:00 மணிக்கு அங்கு திரண்ட மக்கள், கழிவுநீர் கால்வாய் செல்லும் வழியாகவே குடிநீர் பைப் அமைக்கப்படுகிறது.
இதனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளது; கழிவுநீர் வாய்க்கால் செல்லும் வழியில் பாதிப்பு ஏற்படாத வகையில், குடிநீர் பைப் அமைக்க வேண்டும்; என வலியுறுத்தி, கட்டுமான பணியை தடுத்து, ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்தனர்.
இதையடுத்து பைப் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.