/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் ஐக்கியம்
/
பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் ஐக்கியம்
ADDED : ஜூலை 18, 2025 01:04 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் மாற்றுக் கட்சியினர் 1000த்திற்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
சிதம்பரம், அண்ணாமலை நகர் தனியார் திருமண மண்டபத்தில் கடலுார் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது.
இதில், தி.மு.க., -பா.ம.க., - வி.சி., கட்சி - காங்., - நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 1,000த்திற்கும் மேற்பட்டோர் விலகி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
பின், அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., வில் இணைந்தவர்கள் எங்களில் ஒருவராக ஏற்கிறோம். மக்களுக்காக எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இந்த கட்சியை ஜெ., சிறப்பாக வழி நடத்தினார்.
பொன்விழா கண்ட கட்சி அ.தி.மு.க., ஆகும்' என்றார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம். எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல். ஏ., மற்றும் அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயபால், ஜெ., பேரவை பாலமுருகன், பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் 20 மேற்பட்டோர் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.