/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 17, 2025 08:00 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் அருளானந்தா பள்ளியில் 1978-79ம் ஆண்டு ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்து.
முன்னாள் மாணவி கலைமதி குத்து விளக்கேற்றினார். ஓய்வு பெற்ற எஸ்.பி., அப்துல்கனி வரவேற்றார். தமிழ்நாடு மாநில பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மணிவாசகம், சக மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், 47 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்.
ஆசிரியர்களை கூட்டத்திற்கு அழைத்து மரியாதை செய்து கவுரவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் மாணவர்கள் ருத்ராபதி, சாமிதாஸ், சம்பத், சேகர், அறவாழி, ஆத்மநாபன், செல்வகுமார், ஜெயக்குமார், எழிலரசன், செங்குட்டுவன், இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.