/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மார் 18, 2025 04:31 AM

சிதம்பரம், : சிதம்பரத்தில், 41 ஆண்டுகளுக்கு முன்பு உதவி பெறும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணர்கள், சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, வரவரமுனி அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி யில் 1983 - 84ஆம் ஆண்டு பயிண்ற மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தினர். நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். கமலக்கண்ணன் வரவேற்றார்.
விழாவில், இன்னாள் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் ஜீயாவுதீன், சுகுமார் கலைபுலி கணேசன், நம்பெருமாள், அசோக், குமார், பாலதண்டாயுதம், பாஸ்கர், தண்டபாணி, ராஜ மோகன், சிவகுமார், ராணி உட்பட மற்றும் முன்னாள் மாணவ மாணவிகள் குடும்பத்துடன் பங்கேற்று, தங்கள் பழயை நினைவுகளை நினைவு கூர்த்தனர். முத்துகுமரன் நன்றி கூறினார்.
தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில், அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி, 41 ஆண்டுகளுக்கு பின்பு அனைவரையும், தங்கள் பள்ளி கால நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.