/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி வளாகத்தில் விடுதி கட்ட முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு
/
பள்ளி வளாகத்தில் விடுதி கட்ட முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு
பள்ளி வளாகத்தில் விடுதி கட்ட முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு
பள்ளி வளாகத்தில் விடுதி கட்ட முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு
ADDED : செப் 28, 2024 06:45 AM

திட்டக்குடி : திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்து, விடுதி கட்டுவதை எதிர்த்து முன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்த முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி அடுத்த இளமங்கலத்தில் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதி இருந்தது. பள்ளியிலிருந்து விடுதி தொலைவில் உள்ளதால் மாணவர்கள் நடந்து சென்று வர அவதியடைந்தனர். பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி கட்ட முடிவெடுக்கப்பட்டது.
பள்ளி மைதானத்தில் வடகிழக்கு மூலையில் கட்டட பணிகள் துவங்கியபோது முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி மைதானத்தின் தென்மேற்கு மூலையில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆய்வகத்தை இடித்துவிட்டு விடுதி கட்ட முடிவானது. நேற்று காலை 10:30 மணிக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர், விடுதியை எல் ஷேப்பில் கட்டுவதாக கூறிவிட்டு, தற்போது மைதானத்தை ஆக்கிரமிக்கும் வகையில் கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி.,மோகன், நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அரசின் அனுமதி பெற்று நடக்கும் பணிகளை தடுக்கக்கூடாது, ஆட்சேபம் இருந்தால் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதையடுத்து முன்னாள் மாணவர்கள், திட்டக்குடி தாசில்தாரை நேரில் சந்தித்து முறையிடச்சென்றனர்.