/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமலா இல்ல மாணவர்கள் மாநில போட்டியில் சாதனை
/
அமலா இல்ல மாணவர்கள் மாநில போட்டியில் சாதனை
ADDED : அக் 02, 2024 11:52 PM

விருத்தாசலம்: சென்னை வியாசர்பாடி டான் பாஸ்கோ பேரின்ப மையத்தில், சிறுவர் சிறுமிகளுக்கான அரசு மற்றும் நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகள் நடந்தது.
தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை நடத்திய போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் அமலா குழந்தைகள் இல்ல மாணவர்கள் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், பேச்சு, பாட்டு, குழு நடனம் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றனர்.
மேலும், அனைத்து போட்டிகளிலும் சாதனை புரிந்த மாணவர் அபிேஷக்ராஜ் தனிநபர் சாம்பியன் ஷிப் பெற்றார்.
துறையின் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் பள்ளி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். இணை இயக்குனர் கஸ்தூரி, அமலா குழந்தைகள் இல்ல முதன்மை கண்காணிப்பாாளர் எம்பெருமாள் பங்கேற்றனர். சாதனை புரிந்த மாணவர்கள், பயிற்சியாளர்களை தாளாளர் ஜேசுதாஸ் ராஜா பாராட்டினார்.

