/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை மூட பா.ம.க., மாணவர் சங்கம் தீர்மானம்
/
பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை மூட பா.ம.க., மாணவர் சங்கம் தீர்மானம்
பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை மூட பா.ம.க., மாணவர் சங்கம் தீர்மானம்
பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை மூட பா.ம.க., மாணவர் சங்கம் தீர்மானம்
ADDED : பிப் 05, 2024 05:29 AM

கடலுார் : கடலுார் முதுநகரில் கிழக்கு மாவட்ட பா.ம.க., மாணவர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். செயலாளர் கீர்த்திரதன், மணி, ராஜவேல், தாமரை, விக்கி, சதீஷ், செல்வம், சீனுவாசன், ஹரி முன்னிலை வகித்தனர்.
மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் கோவிந்தசாமி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம், தொகுதி பொறுப்பாளர் அய்யாசாமி, அமைப்பு செயலாளர் தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேசினர். ஆனந்த், சிலம்பு உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். லோக்சபா தேர்தலில் பா.ம.க., வெற்றிக்கு தீவிர களப்பணி ஆற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.