ADDED : செப் 22, 2024 02:23 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா, இருதரப்பினர் கருத்துவேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கோர்ட் உத்திரவுபடி ஒன்றிய கவுன்சிலர் தணபதி தரப்பினர் கடந்த ஆகஸ்ட் 21 ம் தேதி முதல் 10 நாள் திருவிழா நடத்தினர். தொடர்ந்து, முன்னாள் ஊராட்சி தலைவர் ேஹமமாலினி தரப்பினர் கடந்த 5 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை திருவிழா நடத்தினர்.
இந்நிலையில் ஒன்றிய கவுன்சிலர் தனபதி, காடாம்புலியூர் போலீசில் முத்தாலம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யாமல் இருந்த அபிேஷக அம்மன் சிலை நெல்மணி கொட்டி பாரலில் இருந்தது.
அந்த சிலை கடந்த 5 ம் தேதிக்கு பிறகு காணவில்லை. முன்னாள் தலைவர் ேஹமமாலினி தரப்பினர்மீது சந்தேகம் உள்ளதுஎன புகார் செய்தார். இந்த அம்மன்சிலையை காடாம்புலியூர் போலீசார் விருத்தாசலம் வட்டம், இருப்பு என்கிற கிராமத்தில் கண்டெடுத்து மீட்டனர். அம்மன் சிலையால் இருதரப்பிற்கு மீண்டும் மோதல் ஏற்படும் என்பதால் அம்மன் சிலையை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்படும் என,காடாம்புலியூர் போலீசார் தெரிவித்தனர்.