/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அம்மன் தாலி திருட்டு; போலீஸ் விசாரணை
/
அம்மன் தாலி திருட்டு; போலீஸ் விசாரணை
ADDED : ஜன 20, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் போலீஸ் சரகம், காட்டாண்டிக்குப்பம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்த பின் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணமும் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத் தாலியும் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.