ADDED : மார் 14, 2024 06:09 AM

கடலுார், : கடலுார் ஜவான்ஸ் பவன் அருகில் அ.ம.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், முருகேசன், மோகன் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் சிவசங்கர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மருத்துவரணி ராஜா பழனிவேல், வக்கீல் அணி துணை செயலாளர் சத்தியராஜ், ஜெ., பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாணவரணி சிவக்குமார், மோகன்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வேல்முருகன், நாராயணமூர்த்தி, மகளிரணி உமா, சிவகாமி, பகுதி செயலாளர்கள் காதர், சம்பத், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், அன்வர் பாஷா, சேதுராமன், பிரவீன்குமார் பங்கேற்றனர்.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் கலாசாரத்தை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முருகன் நன்றி கூறினார்.

