/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அறிக்கை வெளியிட கோரி கமிஷனரிடம் அ.ம.மு.க., மனு
/
அறிக்கை வெளியிட கோரி கமிஷனரிடம் அ.ம.மு.க., மனு
ADDED : மே 22, 2025 11:24 PM

கடலுார்: கடலுார் எம்.புதுாரில் நடக்கும் பஸ்நிலைய புதிய கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை வெளியிடக்கோரி, அ.ம.மு.க., வினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து கடலுார் மாநகராட்சி கமிஷனர் அனுவிடம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:
கடலுார் புதிய பஸ் நிலையம், கடலுாரிலேயே அமைய வேண்டும் என அ.ம.மு.க.,போராடி வருகிறது. ஆனால் அரசு எந்த முடிவும் எடுத்த மாதிரி தெரியவில்லை. தற்போது எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் பணிகள் துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. எனவே, கடலுார் புதிய பஸ் நிலையம் குறித்து மாநகராட்சி அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் சத்யராஜ், மாவட்ட நிர்வாகிகள் வேல்முருகன், கல்யாணராமன், பகுதி செயலாளர்கள் காதர், சிவசங்கர், சம்பத், ஒன்றிய செயலாளர்கள் அன்வர் பாட்சா, சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.