/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணத்தில் அம்ரூத் 2.0 திட்டப் பணிகள்; அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
/
ஸ்ரீமுஷ்ணத்தில் அம்ரூத் 2.0 திட்டப் பணிகள்; அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
ஸ்ரீமுஷ்ணத்தில் அம்ரூத் 2.0 திட்டப் பணிகள்; அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
ஸ்ரீமுஷ்ணத்தில் அம்ரூத் 2.0 திட்டப் பணிகள்; அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
ADDED : பிப் 04, 2024 03:17 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில், அம்ரூத் 2.0 திட்டப்பணிகளை, அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டப்பணிகள் துவக்கம் மற்றும் நவீன பஸ் நிறுத்த திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் வெற்றிவேல், பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி உதவி இயக்குனர் வெங்கடேசன் வரவேற்றார்.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் 12 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் துவக்கப்பட உள்ள அம்ரூத் 2.0 திட்டத்தின் துவக்கமாக, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
சப்தரிஷி தெருவில் லோக்சபா எம்.பி. சண்முகம், தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தார். அப்போது, மாநில அளவில் கிக் பாக்சிங், சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தங்க ஆனந்தன், செந்தில்குமார், நகர செயலாளர் செல்வகுமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் வாசு ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி தலைவர் முத்துராமலிங்கம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சதீஷ்குமார், ஆதி திராவிடர் நல குழு மாவட்ட துணை அமைப்பாளர் கிருபானந்தம், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, இளைஞரணி வீரவேல், பேரூராட்சி துணைத் தலைவர் முத்தமிழரசி பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேறறனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை நன்றி கூறினார்.