/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உத்திராபதீஸ்வரர் கோவிலில் 28ம் தேதி அமுது படையல்
/
உத்திராபதீஸ்வரர் கோவிலில் 28ம் தேதி அமுது படையல்
ADDED : ஏப் 26, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சிதம்பரம் உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுதுபடையல் பெருவிழா, இன்று (26ம் தேதி) மாலை 6:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அமுது படையல் நிகழ்வு நடக்கிறது.
28ம் தேதி, சிவன் வேடம் அணிந்து உத்திராபதீஸ்வரர் வீதியுலாவுடன், சிறுதொண்ட நாயனார் அமுதுபடையல் விழா நடக்கிறது.
அமுது படையல் விழாவில், சில மருந்து பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
குழந்தை இல்லாதவர்கள் உத்திராபதீஸ்வரரை வணங்கி, பிரசாதத்தை உண்டால் குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

