ADDED : டிச 25, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே கிராம பகுதியில் வட்டமடித்த கழுகின் உடலில் ஜி.பி.எஸ்., போன்ற கருவி பொருத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி கிராமத்தில் நேற்று காலை 11:30 மணியளவில் கழுகு ஒன்று அப்பகுதியில் உள்ள வீட்டின் அருகே உட்கார்ந்திருந்தது. இது, அரிய வகையான 'பாரு' என்ற இனத்தை சேர்ந்தது.
இக்கழுகின் காலில் பிளாஸ்டிக்கால் ஆன பட்டைகள், முதுகில் ஜி.பி.எஸ்., போன்ற கருவி பொருத்தப்பட்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள், கழுகை பிடிக்க சென்றனர்.
ஆனால் கழுகு பிடிபடாததால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை யாரும் வராத நிலையில் கழுகு மதியம் 2:00 மணிக்கு அங்கிருந்து பறந்து சென்றது. வனத்துறை விளக்கம் அளித்தால் மட்டுமே இதற்கான மர்மம் விலகும்.

