/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரத்தசோகை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
/
ரத்தசோகை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 25, 2025 06:51 AM

திட்டக்குடி : திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவிகளுக்கு ரத்த சோகை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆனந்தி, சுரேந்திரன், கணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கி, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், முத்துச்செல்வன், மதனகோபால், பகுதி செவிலியர்கள் சத்தீஸ்வரி, முத்துலட்சுமி, சுகாதார செவிலியர் ஜெயப்பிரியா, லேப் டெக்னீஷியன் பிரியா மற்றும் மக்களை தேடி மருத்துவக் குழுவினர், விரிவுரையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.