/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்கன்வாடி மையம்: எம்.எல்.ஏ., திறப்பு
/
அங்கன்வாடி மையம்: எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : ஜன 02, 2025 08:30 PM

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியன ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, நேற்று திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பி.டி.ஒ.,சங்கர், குழந்தை நல அலுவலர் பவானி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம், கூட்டுறவு செயலாளர் ரூபா. ஊராட்சி தலைவர்கள் சூரியகலா அண்ணாமலை, அஞ்சலை வீரபாண்டியன். துணைத் தலைவர்கள் சண்முகவேல், அமுதா சுப்பிரமணியன். ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் குமார், ஒன்றிய பொருளாளர் ஐயப்பன், தகவல் தொழில் நுட்ப அணி சுரேஷ், ஆனந்தன் அழகேசன், வேல்முருகன் பைரவன், அழகானந்தம் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.