/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆங்கிகா அகாடமி முப்பெரும் விழா மாணவிகள் இசை-நடனம்
/
ஆங்கிகா அகாடமி முப்பெரும் விழா மாணவிகள் இசை-நடனம்
ADDED : நவ 04, 2024 05:48 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த முப்பெரும் விழாவில், இசை மற்றும் நாட்டிய வடிவம் கொடுத்து, மாணவிகள் நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சிதம்பரத்தில், ஆங்கிகா அகாடமி முப்பெரும் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, பத்ம ஸ்ரீ நடராஜ் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அகாடமி பேராசிரியர் சின்னமனுார் சித்ரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக துணைவேந்தர் பஞ்சநதம், தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினிஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் ராஜமன்னன், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை ராமநாதன், பொதிகை தொலைகாட்சி துர்கா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
விழாவில் சின்னமனூர் விஜயலட்சுமி, ராமநாதன், .கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை டாக்டர் ஸ்ரீஹரி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், திருக்குறளுக்கு, இசை நாட்டிய வடிவம் கொடுத்து, மாணவிகள் நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்த நடனத்தை, உலக அரங்கில், அனைவர் மத்தியிலும் கொண்டு சென்று, மாணவ மாணவிகள் மத்தியில் இசை , நாட்டிய பாடத்திட்டமாகவே வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த நாட்டிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அங்கீகா அகாடமி இயக்குனர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.