ADDED : பிப் 04, 2026 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: ஊமங்கலத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆலோசனைப்படி, ஊமங்கலம் கிளை சார்பில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் ஊராட்சி செயலாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனசிகாமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் கந்தசாமி, செல்வராஜ், பெரியசாமி, ரமேஷ், பன்னீர்செல்வம், காளிதாஸ், ஊமைத்துரை, கொளஞ்சியப்பன், சின்னான், பாஸ்கர், தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

