/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உதவி
/
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உதவி
ADDED : நவ 04, 2024 06:21 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில், ஏழை மாணவன் தங்கும் விடுதி செலவை முன்னாள் மாணவர்கள் ஏற்று உதவினர்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்,முதலாம் ஆண்டு மாணவர் பிரகாஷ் ராஜ், இவரின் தந்தை பார்வை இழந்த நிலையில், குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்துவருகிறது. இதனால் மாணவன் தன் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனையறிந்த, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 1994 - - 1998 ம் கல்வி ஆண்டில் மின்னணு மற்றும் கருவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, மாணவர் பிரகாஷ் ராஜின் விடுதியில் தங்கி படிப்பதற்காக, 55 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.
மேலும் மாணவன் 4 ஆண்டுகளுக்கான செலவையும்தாங்களே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
மாணவருக்கான உதவி வழங்கும் விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் பங்கேற்று முன்னாள் மாணவர்களை பாராட்டினார்.
அப்போது பொறியியல் புல முதல்வர் கார்த்திகேயன், மற்றும் அறிவுடைநம்பி, சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.