/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலைக்கழக தனி அதிகாரிகள் 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அண்ணாலை பல்கலைக்கழக தனி அதிகாரிகள் அறிவிப்பு

ADDED : மே 21, 2025 11:31 PM

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைகழக தனி மற்றும் தொடப்பு அதிகாரிகள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற கொடுத்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டி, பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் எதிரில் நேற்று கூடினர்.
துணை வேந்தர் அலுவலகம் எதிரில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கோரிக்கைகளை அமல்படுத்தவில்லை என்றால். வரும் 27ம் தேதி முதல் கால வரையற்ற போராட்டம் நடத்தபோவதாக பல்கலைகழக கன்வீனர் மற்றும் பதிவாளரிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு கமிட்டி உறுப்பினர் அருட்செல்வி, பதிவாளர் பிரகாஷ் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.