/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் தேர்வு பணியை புறக்கணித்து போராட்டம்
/
அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் தேர்வு பணியை புறக்கணித்து போராட்டம்
அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் தேர்வு பணியை புறக்கணித்து போராட்டம்
அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் தேர்வு பணியை புறக்கணித்து போராட்டம்
ADDED : நவ 10, 2025 11:16 PM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு பணிகளை புறக்கணித்து பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, 2013ல் பல்கலைகழகத்தை அரசு ஏற்றது. அதனை தொடர்ந்து, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பல்கலை ஊழியர் மற்றும் பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு, 7வது ஊதியக்குழு நிலுவை தொகை, ஆசிரியர் பற்றாக்குறை, ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக, பல்கலை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமையில், நேற்று தொடர் உள்ளிருப்பு போராட்டம் துவங்கப்பட்டது. தேர்வு பணிகளை புறக்கணித்து, பல்கலைக்கழக நிர்வாக அலுவலக வாயிலில் 300க்கும் மேற்பட்ட போராசிரியர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், தேர்வு பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

