/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் : விருதையில் 24 பேர் கைது
/
போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் : விருதையில் 24 பேர் கைது
போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் : விருதையில் 24 பேர் கைது
போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் : விருதையில் 24 பேர் கைது
ADDED : நவ 10, 2025 11:16 PM

விருத்தாசலம்: ஊ.மங்கலம் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 24 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
மந்தாரக்குப்பம் அடுத்த புது கூனங்குறிச்சி மற்றும் புது வேப்பங்குறிச்சி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்ததியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். புது கூனங்குறிச்சி மற்றும் புது வேப்பங்குறிச்சி பகுதியில் வசிக்கும் கிறிஸ்துவ அருந்ததிய மக்கள் சர்ச்சும், இந்து அருந்ததிய மக்கள் கோவிலும் கட்டித்தர என்.எல்.சி., நிர்வாகத்திடம் நீண்டநாள் கோரிக்கை வைத்து வந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி, என்.எல்.சி., நிர்வாகம் அனுமதியின்றி, இந்து அருந்ததியர் மக்கள், அப்பகுதியில் புதிதாக அம்மன் சிலை மற்றும் திரிசூலம் வைத்தனர். இதற்கு அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விருத்தாசலம் தாசில்தார் அரவிந்தன், இந்து அருந்ததியர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிலையை அப்புறப்படுத்த வலியுறுத்தினர்.
ஆனால், சிலை அகற்றாததால், தாசில்தார் அரவிந்தன் அம்மன் சிலை மற்றும் திரிசூலத்தை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அருந்ததியர் மக்கள் கடந்த செப்., 19ம் தேதி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அன்று மாலை தாசில்தாரை கண்டித்து, இந்து அருந்ததியினர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று விருத்தாசலம் பாலக்கரையில், ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அனைத்து மக்கள் விடுதலைகட்சி மாநில செயல்தலைவர் முருகன் தலைமையில், இந்து அருந்ததியர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து அருந்ததியர் மக்களுக்கு கோவில் கட்டி தர வேண்டும். அருந்ததியர் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் கூனங்குறிச்சி ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருந்ததியர் மக்கள் மீது பொய் வழக்கு போட நினைக்கும் ஊ.மங்கலம் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அதன்பின், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர்.
பின்னர், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், விடுதலை கட்சி மாநில செயல் தலைவர் முருகன் உள்ளிட்ட 24 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

