/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சர் கணேசன் பெருமிதம்
/
மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சர் கணேசன் பெருமிதம்
மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சர் கணேசன் பெருமிதம்
மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சர் கணேசன் பெருமிதம்
ADDED : நவ 10, 2025 11:17 PM

சிறுபாக்கம்: மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவதாக அமைச்சர் கணேசன் பேசினார்.
சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூர் ஊராட்சியில் மக்கள் குறைகேட்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மங்களூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து, நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது;
தமிழ்நாடு முழுதும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். திட்டக்குடி தொகுதியில் 55 ஆயிரம் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. விடுபட்ட குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரங்கூரிலிருந்து பெங்களூர் வரை அரசு பஸ், ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டது. விரைவில் திருமண மண்டபம், கழிவறை வசதிகள் நிறைவேற்றப்படும் என பேசினார்.
நிகழ்ச்சியில் மங்களூர் ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் திருவள்ளுவன், குமணன், சேகர், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

