/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலை.,யில் பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு
/
அண்ணாமலை பல்கலை.,யில் பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு
அண்ணாமலை பல்கலை.,யில் பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு
அண்ணாமலை பல்கலை.,யில் பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு
ADDED : ஜன 29, 2025 11:23 PM

சிதம்பரம், : அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கால் பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான பெண்கள் கால்பந்து போட்டி பஞ்சாப் மாநிலம் பொக்வாராவில் உள்ள ஜி.என்.ஏ., பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்தது.
அப்போட்டியில் தென்மண்டலத்தில் இருந்து அண்ணாமலை பல்கலைகழகம் உட்பட 4 அணிகள் மற்றும் பிற 12 அணிகள் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.
இப்போட்டியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணியினர் வெண்கல பதக்கம் வென்றனர். மேலும் அடுத்த மாதம் கோவாவில் நடைபெற உள்ள கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டியில் விளையாட, 5வது ஆண்டாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற பெண்கள் கால்பந்து அணியினரை, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வி, பல்கலைகழக பதிவாளர் பிரகாஷ், உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டோர் பாராட்டினர். பயிற்சியாளர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.