ADDED : மார் 25, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழையநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கற்பகம் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி தலைவர் கீதாராணி முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் நடராஜன், மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
அலுவலக மேற்பார்வையாளர் இளவரசன், ஆசிரியர் பயிற்றுநர் நெப்போலியன், பட்டதாரி ஆசிரியர் அமுதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி வனரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டதாரி ஆசிரியர் விவேகாநந்தன் நன்றி கூறினார்.