/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முந்திரி வாரியம் அமைக்கும் அறிவிப்பிற்கு வரவேற்பு
/
முந்திரி வாரியம் அமைக்கும் அறிவிப்பிற்கு வரவேற்பு
ADDED : மார் 21, 2025 06:19 AM
பண்ருட்டி: முந்திரி வாரியம் அமைக்கப்படும் என அறிவித்த வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
தமிழக வேளாண் பட்ஜெட்டில், முந்திரி நலவாரியம் அமைக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம அறிவித்தார். இதனை, தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
மேலும், சென்னையில் அமைச்சர் பன்னீர்செல்வத்தை, தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி ஆகியோர் சந்தித்த நன்றி தெரிவித்தனர்.
சங்க உறுப்பினர்கள் சதீஷ் ஆரோக்கியராஜ், சங்கர், ஆறுமுகம், சிவக்குமார், ஆனந்தகுமார், ரவி உடனிருந்தனர்.