/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எடச்சித்துார் அரசு பள்ளியில் ஆண்டு விழா
/
எடச்சித்துார் அரசு பள்ளியில் ஆண்டு விழா
ADDED : மார் 28, 2025 05:31 AM

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சக்தி வேல் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துகிருஷ்ணன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி துணை தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜான் போஸ்கோ வரவேற்றார். ஆசிரியர் சரண்யா ஆண்டறிக்கை வாசித்தார்.
விருத்தாசலம் வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ் வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
பள்ளி மேல ாண்மை குழு தலைவர் பார்வதி மற்றும் உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான கல்வி சீர் வரிசை பொருட்கள் வழங்கினர்.
ஆசிரியர் நித்யா நன்றி கூறினார்.