ADDED : மார் 18, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர் காட்டுசாகை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் துரைராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். ஆசிரியை ஆரோக்கியசெல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் முத்துக்குமரன், தமிழ் கூடல் விழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் நுாலக வாசகர் வட்டத் தலைவர் சிங்காரம் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் ஜீவகாருண்யா, தமிழ்மதி, வேலாயுதம் வாழ்த்திப் பேசினர்.
ஆசிரியை பாக்கியவதி நன்றி கூறினார்.