/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிறுத்தப்பட்ட சிதம்பரம்- சேலம் அரசு பஸ் வியாபாரிகள், மாணவர்கள் கடும் பாதிப்பு மீண்டும் இயக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

ADDED : அக் 07, 2024 06:55 AM
புவனகிரி: சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சை தடையில்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து கீரப்பாளையம், புவனகிரி, விருத்தாசலம் வழியாக தினசரி இரவு.11.25 மணிக்கு தடம் எண் 196 (எச்) மற்றும் இரவு.11.45 மணிக்கு தடம் எண் 196(ஐ), அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் வர்த்தகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர்.
தற்போது இரவு நேரத்தில் இந்த இரண்டு பஸ்களையும் சேலம் மார்க்கத்தை ரத்து செய்து விட்டு, சென்னை கிளாம்பாக்கத்திற்கு இயக்குகின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த செயல் மேற்கொள்வதால் வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினர்களும் பஸ் இல்லாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணியர்கள், சிதம்பரம் நகரத்திற்கு வந்து பஸ் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
சிதம்பரம் அரசு போக்குவரத்து கிளை அலுவலக அதிகாரிகள் அலட்சியத்தை கை விட்டு, முறைப்படி ஒதுக்கிய தடங்களில் உரிய பஸ்களை இயக்கிட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.