/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அக்னிவீர் ஆட்சேர்ப்பு பிரிவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
/
அக்னிவீர் ஆட்சேர்ப்பு பிரிவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
அக்னிவீர் ஆட்சேர்ப்பு பிரிவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
அக்னிவீர் ஆட்சேர்ப்பு பிரிவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 05, 2025 05:33 AM
கடலுார்; அக்னிவீர் ஆட்சேர்ப்பு பிரிவில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
2025--26ம் ஆண்டிற்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு மற்றும் மண்டல, மத்திய பிரிவுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) கீழ் வரும் தமிகழத்தை சேர்ந்த 11 மாவட்டங்கள் (கடலுார், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை,திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு), புதுச்சேரி மாவட்டம் (யூனியன் பிரதேசம்) அந்தமான் நிக்கோபார் தீவுகள் குழுமத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து விண்ணப்பங்கள் அக்னிவீர் (ஜெனரல் டூட்டி), அக்னிவீர் (டெக்னிக்கல்), அக்னிவீர் (ட்ரேட்ஸ்மேன்) 10ம் வகுப்பு தேர்ச்சி, நர்சிங் அசிஸ்டெண்ட், சிப்பாய் மற்றும் அக்னிவீர் (ஜெனரல் டூட்டி) (பெண்கள் மிலிட்டரி போலீஸ்) ஆகிய பிரிவுகளுக்கு வரவேற்கப்படுகிறது.
தேர்வர்கள் தகுதி அடிப்படையில் ஏதேனும் 2 பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம். சி.இ.இ., தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும்.
ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் என்.சி.சி., தகுதி பெற்றவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு சென்னை ஆட்சேர்ப்பு அலுவலகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.