/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 08, 2025 04:10 AM
கடலுார்: அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 222 அங்கன்வாடி பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை பெண்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது.
அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவம், 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், எஸ்.சி, எஸ்.டி., வகுப்பினர் 40 வயது வரை இருக்கலாம்.
உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழ் பேச, எழுத தெரிந்தவராகவம், 38 வயதிற்கு உட்பட்டவராகவும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.டி., வகுப்பினர் 45 வயது வரையிலும், மாற்று திறனாளிகள் 43 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும் 9ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பிற சான்றிதழ்களில் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும். நேர்காணலின்போது அனைத்து அசல் சான்றுகளை கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

