/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தங்க நகை மதிப்பீடு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
தங்க நகை மதிப்பீடு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : செப் 25, 2025 04:15 AM
கடலுார் : கடலுார் எம்.ஜி.ஆர்., கூட் டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர தங்க நகை மதிப்பீடு பயிற்சி அளிக்கப்படுகிற து.
இதுகுறித்து கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஒரு அங்கமாக செயல்படும் கடலுார் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் உடனடி வேலைவாய்ப்பிற்கான தங்கத்தின் தரமறிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தங்க நகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முடித்த பின்னர் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணியாற்றலாம்.
இப்பயிற்சியின் போது தங்கத்தை பற்றிய அடிப்படை பயிற்சி, பழைய நகையை தரம் பார்த்து கொள்முதல், உரைகல்லில் தரம் அறிதல், தங்கத்தில் இன்றைய நவீன தொழில் நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், கே.டி.எம்., மற்றும் ஹால்மார்க் பற்றிய விளக்கம் தொடர்பான பயிற்சியுடன், பயிற்சிக்கான உபகரணங்கள் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகிறது.
பயிற்சி கட்டணம் 4,668 ரூபா ய் ஆகும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வரும் 15ம் தேதி துவங்குகிறது. பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர்.கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்-3, கடற்கரை சாலை, சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம், கடலுார்-1 என்ற முகவரியிலோ அல்லது 04142-222619, 9600906017 ஆகிய எண்களில் தெரிந்து கொள்ளலாம்.