தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

 கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

 கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூன் 11, 2026 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026--27ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி செய்திக்குறிப்பு:

கடலுார் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026----27ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பிளஸ் 2 அல்லது 10ம் வகுப்புடன் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.

வரும் ஜூலை முதல் தேதியன்று, குறைந்தபட்சம் 17வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

பயிற்சி காலம் ஒருவருடம் ஆகும். இப்பயிற்சி இரண்டு பருவ முறைகள் கொண்டது. பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும்.

பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத முடியும். வரும், ஜூலை 20ம் தேதி மாலை 5:00 மணி வரை தமிழக கூட்டுறவு ஒன்றிய இணையதளமான www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு டாக்டர்.எம்.ஜி.ஆர்.கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.3. மொத்த கடற்கரை நுகர்வோர் விற்பனை பண்டகசாலை வளாகம், கடலுார் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04142-222619 சரவணபவ சாலை கூட்டுறவு என்ற தொலைபேசி எண் மற்றும் icmcuddrmgr@gmail.com என்ற மின்அஞ்சல் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us