ADDED : ஜூன் 11, 2026 08:07 AM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் யோகா மையங்கள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மந்தாரக்குப்பம், என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மைதானத்தில் தினசரி காலை மற்றும் மாலை நேரத்தில், தொழிலாளர்கள், ஒய்வு பெற்றோர், வியாபாரிகள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு, யோகா மையங்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
உடல் நலனுக்கு உடற்பயிற்சி என்றால் மன நலனுக்கு யோகா முக்கியத்துவம் வாய்ந்ததாக, உள்ளது. யோகா பயிற்சியால் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமான வாழமுடியும். அதனால், இப்பகுதியில் யோகா மையங்களை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே ண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
