ADDED : ஜன 11, 2024 04:19 AM
புவனகிரி: மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு சேர்மன் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் வாசுதேவன், பி.டி.ஓ.,க்கள் பொன்சிவகுருநாதன், முருகன் முன்னிலை வகித்தனர். மேலாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில், ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.
சிதம்பரம், ஜன. 11 -
கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ., சிறுபான்மையினர் அணி தலைவர் அஸ்கர் அலி, பரங்கிப்பேட்டை ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை, திருச்சி ரயில்வே கோட்ட முதன்மை வணிகவியல் மேலாளர் செந்தில்குமார் நியமனம் செய்துள்ளார்.
இவருக்கு பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாநில தலைவர் டெய்சி தங்கையா, கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருது உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.