ADDED : ஜூலை 29, 2025 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி : நெய்வேலியில் இயல், இசை, நாடக கலைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் படைப்பாளிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
டவுன்ஷிப் வட்டம் 18, என்.எல்.சி., ஓ.பி.சி., நலச்சங்க அலுவலக கலையரங்கத்தில் நடந்த விழாவில், ஓ.பி.சி., நலச்சங்க பொதுச் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார்.
தலைவர் கணேசன், பொருளாளர் தமிழரசன், அலுவலக செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
என்.எல்.சி., செயல் இயக்குநர் ஜாஸ்பர் ரோஸ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, குறும்பட படைப்பாளிகள் மற்றும் நெய்வேலியில் புத்தகக் கண்காட்சியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
விழாவில், காதர் மொய்தீன், சிவகாமி, சந்திரகலா, உதயகுமார், தனம், குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.