தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா

சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா

சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : அக் 10, 2024 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 03:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: முதல்வர் கோப்பைக்கான மாநில அளவில் பங்கு பெற உள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில், பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பீச் வாலிபால் போட்டியில் 2ம் இடம், நீளம் தாண்டுதலில் 3ம் இடம், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் ராஜேஷ், முகேஷ், ஸ்ரீநிஜா ஆகியோர் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா நேற்று நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கோபி தலைமை தாங்கினார். பள்ளி செயலர் ஞானப்பிரகாசம் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடற்கல்வி இயக்குனர், ராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் அனிதா, திணேஷ், அருள்முருகன், உதவி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us